» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

செவ்வாய் 7, நவம்பர் 2023 10:28:43 AM (IST)



நெல்லை தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மாநகர், புறநகர், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் என மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் முழு வீச்சில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாநகரில் மதியம் சுமார் 2 மணி நேரம் வரை பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.அதேநேரம் விடுமுறை நாள் என்பதாலும், தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே இருப்பதாலும் பஜார்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மழையால் ஆங்காங்கே அவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 

தென்காசியில் பெய்த கனமழையால் காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் தெப்பக்குளம் நிரம்பியது. பிரதான சாலைகளில் உள்ள சாக்கடை வடிகால் நிரம்பி மழை நீருடன் கலந்து வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory