» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு நாளை நெல்லை வருகை!

செவ்வாய் 7, நவம்பர் 2023 12:03:45 PM (IST)

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு நாளை (நவ.08) திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்திற்கு 08.11.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள்; குழு தலைவர்/ அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமையில், உறுப்பினர்கள் ஆகியோர் வருகை புரியவுள்ளார்கள்.

மேலும், இக்குழுவினர் 08.11.2023 அன்று காலை திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை மனுக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு (2023-24) சட்டமன்றப் பேரவைச் செயலாளர் .கி.சீனிவாசன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்.கா.ப.கார்த்திகேயன், முன்னிலையில், சட்டமன்ற பேரவை குழு தலைவர் /அரசு தலைமை கொறடா .கோவி.செழியன் தலைமையில் உறுப்பினர்களுடன் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள்.

அதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஏற்கனவே மனுக்கள் குழுவால் பெறப்பட்ட மனுக்கள் மீதும், பேரவைக்கு அளிக்கப்பட்ட மனுக்கள் குழுவில் அறிக்கையில் குழு பரிந்துரை செய்துள்ள மனுக்களின் மீதும் துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory