» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு ஆய்வு

புதன் 8, நவம்பர் 2023 4:26:45 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுத் தலைவர் / அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் தலைமையில் குழு உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுத் தலைவர்/ அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் முன்னிலையில், சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்கள் கந்தசாமி, நல்லதம்பி, கே.பொன்னுசாமி, சட்டமன்ற வை.முத்துராஜா, சு.ராதாகிருஷ்ணன், பேரவை துணை செயலாளர் கே.ரமேஷ், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஆகியோருடன் இன்று (08.11.2023) கள ஆய்வு மேற்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள இளங்கோ நகரில் பாதாளச் சாக்கடை கேட்டு, மனு அளித்திருந்தனர். அந்த மனு குறித்து சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு நேரிடையாக சென்று இளங்கோ நகரில் பாதாள சாக்கடை குறித்து மனுதாரரிடமும் கேட்டறிந்ததோடு, பாதாளச் சாக்கடை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இருக்கும் பட்சத்தில் திருநெல்வேலி மாநகராட்சி பாதாள சாக்கடை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

தொடர்ந்து, புறவழிச்சாலையில் ரோஸ்மேரி மருத்துவமனை அருகில் முருகன் குறிச்சியிலிருந்து வண்ணாரப்பேட்டை புறவழிச்சாலை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைப்பதற்கான தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை ஆய்வு செய்தனர்;. தொடர்ந்து, பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் குடிநீர் வசதிகள், அடிப்படை வசதிகள் போதுமானதாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, இருதய பிரிவு, ஆண் நோயாளிகள் சிகிச்சை பெறும் பிரிவினை பார்வையிட்டு, சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சை வழங்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

கங்கைக்கொண்டான் சிறு குளத்தில் சீமைக்கருவேல முள் செடி வளர்ந்துள்ளது என வரப்பெற்ற மனு குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு, மனுதாரரிடம் நேரில் கேட்டறிந்தார்கள். தற்போது தண்ணீர் இருப்பதால், ஏப்ரல் 2024-க்குள் ஏலம் விட்டு, சிமைக்கருவேல செடி அகற்றிடப்படும் என மனுதாரரிடம் குழு தெரிவித்தனர். மானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்துவது குறித்து பார்வையிட்டனர். மேலும், ரஸ்தா அருகில் நரிக்குடியில் ரூ.11.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, கட்டுமானப் பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சட்டமன்ற பேரவை மனுக்க குழு அறிவுறுத்தினர்.

ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, திருநெல்வேலி கோட்டாட்சியர் ஷேக் அயூப், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை முதல்வர் ரேவதி, கல்லூரி இணை இயக்குநர் பாஸ்கர், செயற்பொறியாளர்கள் மாரியப்பன், அண்ணாதுரை, நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் முத்துகுமரன், துணை இயக்குநர் (சுகாதாரம்) இராஜேந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory