» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கலாம் கல்வி மைய போட்டிகள்: ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி முதலிடம்
வெள்ளி 17, நவம்பர் 2023 5:40:29 PM (IST)
கலாம் கல்வி மையம் சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள கலாம் கல்வி மையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவிகள் கவுதமி, சாரா, சல்ஹா ஆகியோர் முதலிடம் பெற்றனர். மேலும் ஆனி கேத்தரின், மாதேஷ், பிகல்யா, ஹரிணி, தக்க்ஷிதா, ருச்சிகா, அல்ஷிஃபா, காரா, கிருத்திக், முகமது யூசுப் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.