» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசுப் பேருந்துகளுக்கு பாஸ்டேக்கில் தேவையான இருப்பு உள்ளது : பொதுமேலாளர் தகவல்
புதன் 31, டிசம்பர் 2025 4:06:18 PM (IST)
அரசுப் பேருந்துகள் சுங்கசாவடிகளை கடந்து செல்வதற்கு பாஸ்டேக்கில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் பா.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம் நாகர்கோவில் மண்டலத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் நாங்குநேரி சுங்கசாவடிக்கு வந்த போது, பாஸ்டேக்கில் பணம் இல்லாததால் சுங்கசாடியினை கடந்து செல்ல தாமதம் ஏற்பட்டதாக செய்திதாள்களில் வெளியானது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம் நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் பா.பாலசுப்பிரமணியன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்- திருநெல்வேலி மண்டலத்தில் இயங்கும் அனைத்து அரசுப் பேருந்துகளுக்கும் டோல்கேட்டுகளை கடந்து செல்வதற்கு தேவையான முன்பணங்கள் ஏற்கனவே பாஸ்டேக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஒரு சில நேரங்களில் பாஸ்டேக்கில் ஏற்படும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மட்டுமே சுங்கசாவடிகளில் அரசுப் பேருந்துகள் காலதாமதமாக கடந்து செல்கிறது. மேலும் நாகர்கோவில் மண்டலத்திலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் கால தாமதம் ஏற்படாமல், குறித்த நேரத்தில் சுங்க சாவடிகளை கடப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரக புதிய டிஐஜியாக சரவணன் நியமனம்!
புதன் 31, டிசம்பர் 2025 12:19:33 PM (IST)

நெல்லை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.2 இலட்சம் நன்கொடை!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:15:31 PM (IST)

பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்!
திங்கள் 29, டிசம்பர் 2025 5:07:43 PM (IST)

நெல்லையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் : டிஆர்ஓ தகவல்
திங்கள் 29, டிசம்பர் 2025 12:18:32 PM (IST)

திருநெல்வேலியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் சுகுமார் ஆய்வு
சனி 27, டிசம்பர் 2025 5:23:34 PM (IST)

நெல்லை அரசு டவுன் பஸ்சில் முதல் பெண் கண்டக்டர் : சாதனை படைக்கும் சிங்கப்பெண்!!
சனி 27, டிசம்பர் 2025 8:51:46 AM (IST)


