» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரிக்கு 4 அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து!

வெள்ளி 17, நவம்பர் 2023 7:45:18 PM (IST)



நெல்லை வண்ணார்ப்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி அகில இந்திய அளவில் 4 அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியுள்ளது. 

பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியானது 2018ம் ஆண்டு முதல் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையில் தொடர்ச்சியாக அதிகபட்ச அந்தஸ்தை பெற்று வருகிறது. அதற்கு காரணம், மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் தொழில் முனைவோரை உருவாக்குவது, அரசின் ஸ்டார்ட்அப் நிகழ்வில் பங்கேற்பது, லாபகரமான அறிவுசார் படைப்புகள், புதிய கண்டுபிடிப்புகள், கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகள் அனைத்தும் அதிகமாக நடத்தப்படும் கல்லூரிகளுக்கு நட்சத்திர அந்தஸ்தை மத்திய கல்வி அமைச்சகம் வழங்குகிறது.

எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி கல்லூரி மாணவர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி மூலமாக தொழில் மானியம் பெறக்கூடிய சந்தர்ப்பங்களும், அதன் வாயிலாக புதிய தயாரிப்புகளை உருவாக்கக்கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது. கல்லூரியில் உள்ள 20 பயன்பாட்டு தொழிற்சாலை ஆய்வகங்கள் உள்ளடக்கிய இன்குபேஷன் மையம் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை தயாரித்து உருவாக்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் போட்டி, தேசிய அளவிலான போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளனர். ஆசிரியர்களும், மாணவர்களும், புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டு மத்திய கல்வி அமைச்சகம், அகில இந்திய அளவில் 3426 பொறியியல் கல்லூரி நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட 4 அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து பெற்ற 142 கல்லூரிகள் பட்டியலில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இடம் பெற்றுள்ளது. 2018ம் ஆண்டு முதல் எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி தொடர்ந்து நட்சத்திர அந்தஸ்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து பெற ஊக்கம் அளித்த பொதுமேலாளர்கள்   K.ஜெயக்குமார், S.கிருஷ்ணகுமார், முதல்வர்   V.வேல்முருகன், தொழில் முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன் மற்றும் தொழில்முனைவோர் துறை துணை தலைவர் ராஜகுமார், கன்வீனர் பேராசிரியர் .பிரேம் ஆனந்த், ஒருங்கிணைப்பாளர்கள் உதவி பேராசிரியர்கள் மாரியம்மாள், மேரி சுமிதா, சங்கீதா,   பாலாஜி, ஷிர்லி மிர்ட்டில், ராஜ பிரியா, சுப்புலக்ஷ்மி, சூரிய பிரபா, ஆர்த்தி உள்ளிட்டோரை ஸ்காட் கல்வி குழும கல்லூரி நிறுவனர்   S.கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்


மக்கள் கருத்து

ah haNov 18, 2023 - 06:21:50 AM | Posted IP 172.7*****

Hope the teachers are all being paid well as per UGC norms, not 10,000 rupees a month.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory