» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திமுக அரசை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: நெல்லையில் 401 பேர் கைது!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:47:24 PM (IST)

நெல்லையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில், வாக்குறுதி எண் 313-ல் கூறியபடி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி நிரந்தரப்படுத்துவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்கிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும்.
1993-ல் பணியில் சேர்ந்த பணியாளருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும். குழந்தைகள் நலன் கருதி காலி பணியிடங்களை நிபந்தனையின்றி நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் (சி.ஐ.டி.யு.) சங்கத்தினர் நெல்லை வண்ணாரப்பேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
போரட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஞானம்மாள் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. திருநெல்வேலி மாவட்ட தலைவர் முருகன் மறியல் போரட்டத்தை துவக்கி வைத்தார். அங்கன்வாடி சங்க மாவட்ட தலைவர் பிரேமா, மாநில செயற்குழு உறுப்பினர் மலைபகவதி, மாவட்ட பொருளாளர் இந்திரகலா, துணைத்தலைவர் பூபதி, ஓமணா, கல்யாணி, முனியம்மாள், இணைச்செயலாளர் சாந்தகுமாரி, வசந்தாபாய், ராமலெட்சுமி, லலிதா, தங்கம்(எ)விஜயகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மறியல் போராட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அங்கன்வாடி மையங்களை மூடிவிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு ஆண் உட்பட 401 அங்கன்வாடி பெண் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை நெல்லை மாநகர போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
புதன் 7, ஜனவரி 2026 4:23:14 PM (IST)

ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
புதன் 7, ஜனவரி 2026 11:08:37 AM (IST)

மாணவி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு: அரசு கல்லூரி பெண் முதல்வர்,கணவருடன் கைது
புதன் 7, ஜனவரி 2026 8:09:34 AM (IST)

சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் கண்காட்சி அரங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:53:57 PM (IST)

சிறுமியை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 8:35:18 AM (IST)

திருநெல்வேலியில் 1873 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்!
திங்கள் 5, ஜனவரி 2026 8:36:39 PM (IST)

