» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடி: எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனை!
புதன் 11, மார்ச் 2026 8:40:02 AM (IST)

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நெல்லை மாநகரப் பகுதியில் 11 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், நெல்லை மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மத்திய எல்லை பாதுகாப்புப் படையைச் (BSF) சேர்ந்த 80 வீரர்கள் அடங்கிய ஒரு கம்பெனி பிரிவினர் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக நெல்லை மாநகருக்கு வருகை தந்துள்ளனர். நேற்று காலை முதல் நெல்லை மாநகர போலீசாருடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புப் பணியைத் தொடங்கினர்.
நெல்லை டவுன், பாளையங்கோட்டை மார்க்கெட், கே.டி.சி. நகர், தச்சநல்லூர், வண்ணார்பேட்டை உள்ளிட்ட 11 முக்கிய நுழைவு வாயில் பகுதிகளில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சோதனைச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வாகன சோதனையின் போது, சட்டவிரோத ஆயுதங்கள், வெடிபொருட்கள், கணக்கில் வராத பணம், மதுபானங்கள் மற்றும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கக் கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது. சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் முழுமையாகச் சோதனை செய்யப்பட்ட பின்னரே மாநகரப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்
புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)

துணை நடிகைக்கு காதல் தொல்லை கொடுத்த நெல்லை வாலிபர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:31 PM (IST)

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

நெல்லை - மங்களூரு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
செவ்வாய் 10, மார்ச் 2026 7:59:23 AM (IST)

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

