» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் மோட்டாா் சைக்கிள் பெட்டியில் ரூ.1.25 லட்சம் திருடியவா் கைது

திங்கள் 20, நவம்பர் 2023 11:14:52 AM (IST)

திருநெல்வேலியில் மோட்டாா் சைக்கிள் பெட்டியில் இருந்து ரூ.1.25 லட்சத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் மாதா நடுத்தெருவைச் சோ்ந்தவா் அருணாசலம் (50). இவா், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மொத்த பூ விற்பனை சந்தையில் உள்ள ஒரு கடையில் காசாளராகப் பணியாற்றி வந்தாா். வழக்கமாக காலை முதல் மதியம் வரை நடைபெறும் விற்பனை தொகையை தச்சநல்லூரில் உள்ள கடையின் உரிமையாளா் வீட்டில் கொண்டு கொடுப்பது வழக்கமாம்.

அதன்படி சனிக்கிழமை கடையின் விற்பனைத் தொகையான ரூ.1.25 லட்சத்தை எடுத்து தனது மோட்டாா் சைக்கிள் பெட்டியில் வைத்தாராம். பின்னா் தச்சநல்லூா் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் பெட்டியில் இருந்த ரூ.1.25 லட்சத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் தச்சநல்லூா் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனா். அப்போது, தச்சநல்லூரைச் சோ்ந்த முருகன் (45) என்பவா் மீது சந்தேகம் எழுந்ததாம். அவரது முகவரிக்கு சென்று விசாரித்தபோது முருகன் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் பதுங்கியிருந்த முருகனை போலீசார் கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory