» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திங்கள் 20, நவம்பர் 2023 4:25:54 PM (IST)தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.1,27,374ம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி வழங்கினார்.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள்  குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி; தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர்; பெற்றுக்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் நலவாரிய நலத்திட்ட உதவிகள் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் 07  மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,500ம் வீதம் மொத்தம் ரூ.94,500ம் மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 06- பயனாளிகளுக்கு தலா ரூ.5,479 வீதம் மொத்தம் ரூ.32,874ம்  மதிப்பில் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களையும்,  தாட்கோ மூலம் 14 பயனாளிகளுக்கு தூய்மை பணியாளர்கள் நல வாரிய அட்டைகளையும் என மொத்தம் ரூ.1,27,374ம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி வழங்கினார்;.
  
மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என  மொத்தம்      365 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.முருகானந்தம், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory