» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
திங்கள் 20, நவம்பர் 2023 5:23:53 PM (IST)

நெல்லையில் மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், கொடியசைத்து, தொடங்கி வைத்தார்.
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று (20.11.2023) நடைபெற்ற மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், கொடியசைத்து, தொடங்கி வைத்தார்கள்.
வருகின்ற டிசம்பர் 3 அன்று உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. அதில் 11 சிறப்புப்பள்ளிகளில் உள்ள 293 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
100 மீட்டர் ஒட்டப்பந்தயம், 200 மீட்டர் ஒட்டப்பந்தயம், குண்டு எறிதல், 400 மீட்டர் ஒட்டப்பந்தயம், தொடர் ஒட்டப்பந்தயம், நின்று நீளம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஓடி நீளம் தாண்டுதல் , உருளைகிழங்கு சேகரித்தல், கிரிக்கெட் பந்து எறிதல், தடை தாண்டி ஓடுதல் ஆகிய விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு.சிவசங்கரன் , மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொ) சக்கரவர்த்தி மற்றும் அனைத்து சிறப்புப்பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
