» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி நலவாழ்வுச் சங்கத்தில் பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:42:05 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்கள் தேசிய சுகாதார குழும திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
1. ICTC - Counsellor - 2 பணியிடங்கள்
திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்கள் தேசிய சுகாதார குழும திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
1. ICTC - Counsellor - 2 பணியிடங்கள்
2. Radiographer 4 - பணியிடங்கள்
3. OT Assistant 4 பணியிடங்கள்
4. Nursing Assistant - 4 பணியிடங்கள்
5. Multi Task Worker - 6 பணியிடங்கள்
6. Palliative Care Health Worker - 1 பணியிடம்
7. Health Inspector - 13 பணியிடங்கள்
8. District Quality Consultant - 1 பணியிடம்
9. Medical Officer - 2 பணியிடங்கள்
இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தர பணியோ, முன்னுரிமையோ சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது. இதற்கான விண்ணப்பங்களை https://tirunelveli.nic.in என்ற திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்திட வேண்டும். இணையதளத்தில் 27.01.2026 அன்று மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நேரிலோ, தபால் / மின்னஞ்சல் மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு : சமய நல்லிணக்க மாநாட்டில் வலியுறுத்தல்!
திங்கள் 12, ஜனவரி 2026 3:23:30 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
திங்கள் 12, ஜனவரி 2026 10:26:10 AM (IST)

வீடுகளில் புகுந்து 20 பவுன் நகை-வெள்ளிப்பொருட்கள் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 11, ஜனவரி 2026 10:36:46 AM (IST)

போகி பண்டிகையில் பிளாஸ்டிக், டயர், ட்யூப் எரிக்க கூடாது: ஆட்சியர் சுகுமார் வேண்டுகோள்
சனி 10, ஜனவரி 2026 5:20:20 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு நியமன ஆணை: சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
சனி 10, ஜனவரி 2026 4:31:25 PM (IST)

தொழிலதிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி வழக்கில் ஹரி நாடார் கைது
சனி 10, ஜனவரி 2026 12:52:16 PM (IST)

