» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் ஜன.21ஆம் தேதி பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
வெள்ளி 9, ஜனவரி 2026 12:03:38 PM (IST)
திருநெல்வேலியில் வருகிற 21ஆம் தேதி பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்டத்தில் 21.01.2026 புதன்கிழமை அன்றுகாலை 10.00 மணி முதல் 4.00 மணி வரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பேட்டை, திருநெல்வேலியில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
மேற்காணும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் ஐடிஐ பயின்று தேர்ச்சிப்பெற்ற பயிற்சியாளர்கள் கலந்து கொள்ளலாம். இதில் மத்திய/மாநில அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேவையான பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் பங்கேற்க உள்ள பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ், 10ம்/12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.
தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்துகொள்ளவிருக்கும் தொழிற் நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தொழிற்பழகுநர்களை தேர்வு செய்யும் பொருட்டு, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்களது பங்கேற்பினை உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி, பேட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன்; பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0462-2342432 / 9499055790 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்
புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)

நெல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடி: எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனை!
புதன் 11, மார்ச் 2026 8:40:02 AM (IST)

துணை நடிகைக்கு காதல் தொல்லை கொடுத்த நெல்லை வாலிபர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:31 PM (IST)

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

நெல்லை - மங்களூரு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
செவ்வாய் 10, மார்ச் 2026 7:59:23 AM (IST)

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)