» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாநில செஸ் போட்டியில் நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி சாதனை!
திங்கள் 20, நவம்பர் 2023 6:51:50 PM (IST)

நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மாணவியர் மாநில அளவில் நடந்த மகளிர் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் மண்டலங்களுக்கிடையேயான மகளிர் செஸ் போட்டி சென்னை ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த கல்லூரி மகளிர் குழுவினர் பங்கேற்றனர்.
இதில் எப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரி சார்பில் எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவியர் தனிஷா ராம்ஜோதி, பிளெஸ்ஸி எபனேசர், பெஜிஷா தேவி, கலாவதி, அபிராமி, (முதலாம் ஆண்டு கணினித்துறை) கலந்துகொண்டு அபாரமாக ஆடினர். இப்போட்டியில் பல்வேறு அணிகளை வீழ்த்தி அவர்கள் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற எப்.எக்ஸ். கல்லூரி மகளிர் குழுவுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதற்கு ஊக்கம் அளித்த பொதுமேலாளர் முனைவர் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லுரி முதல்வர் முனைவர் வேல்முருகன், வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா கேப்ரியல், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ்குமார், எஸ்தர் ராணி, நாராயணன் மற்றும் மாணவியரை ஸ்காட் கல்விக்குழும நிறுவனர் முனைவர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக்குழு கூட்டம்
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:18:52 PM (IST)

மக்களவைத் தோ்தலில் சமக தனித்து போட்டியா? டிச.9 இல் சரத்குமார் அறிவிப்பு!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:15:47 PM (IST)

நெல்லை டவுனில் வாலிபர் வெட்டி கொலை: மேலும் இருவா் கைது
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:12:30 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள்: நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 4:02:13 PM (IST)

மாநில யோகா போட்டி: ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர் முதலிடம்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 3:53:50 PM (IST)

கடலில் தவறிவிழுந்து மீனவர் உயிரிழப்பு: குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி!
திங்கள் 4, டிசம்பர் 2023 4:58:43 PM (IST)
