» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ரூ.3½ லட்சத்திற்கு குழந்தையை விற்ற தாய் உள்பட 4 பெண்கள் கைது: புரோக்கருக்கு வலைவீச்சு!
செவ்வாய் 21, நவம்பர் 2023 10:53:13 AM (IST)
ராஜபாளையம் அருகே ரூ.3½ லட்சத்திற்கு ஆண் குழந்தையை விற்ற தாய் உள்பட 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். தென்காசி புரோக்கரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஜீவாநகர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனீசுவரன். இவருடைய மனைவி முத்துசுடலி (வயது 36). இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே 4 வயதில் மகன் உள்ளான். இந்தநிலையில் முத்துசுடலி மீண்டும் கர்ப்பம் ஆனார்.
ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட முத்து சுடலிக்கு கடந்த மாதம் 18-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப ஏழ்மை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாது என முத்துசுடலி முகவூரை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி ராஜேசுவரியிடம் (50) கூறியுள்ளார்.
கடந்த மாதம் 25-ந் தேதியன்று முத்து சுடலி குழந்தையை விற்று உள்ளார். அதன்பின்பு அவருக்கு திடீெரன உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.இதனால் மீண்டும் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் குழந்தையை எங்கே? என கேட்டுள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த குழந்தையை விற்று விட்டதாக முத்து சுடலி அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர் திருப்பதி, விருதுநகர் உதவி மைய மேற்பார்வையாளர் விஸ்வநாதன் ஆகியோர் சேத்தூர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், முத்துசுடலியிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அசினா (35) என்ற பெண்ணிடம் ரூ.3½ லட்சத்திற்கு குழந்தையை விற்றது தெரியவந்தது. அந்த பணத்தில் ரூ.2 லட்சத்தை முத்து சுடலி வைத்துக்கொண்டு மீதமுள்ள பணத்தை குழந்தையை விற்க உதவியவர்களுக்கு பகிர்ந்து கொடுத்ததும் தெரியவந்தது.
எனவே முத்து சுடலி, முகவூரை சேர்ந்த ராஜேசுவரி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வி (40), குழந்தையை வாங்கிய அசினா (35) ஆகிய 4 பெண்களையும் சேத்தூர் போலீசார் கைது செய்தனர். குழந்தை விற்பனைக்கு புரோக்கராக செயல்பட்ட தென்காசியை சேர்ந்த ஜெயபால் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பின்னர் அந்த குழந்தையை மீட்டு விருதுநகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக்குழு கூட்டம்
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:18:52 PM (IST)

மக்களவைத் தோ்தலில் சமக தனித்து போட்டியா? டிச.9 இல் சரத்குமார் அறிவிப்பு!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:15:47 PM (IST)

நெல்லை டவுனில் வாலிபர் வெட்டி கொலை: மேலும் இருவா் கைது
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:12:30 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள்: நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 4:02:13 PM (IST)

மாநில யோகா போட்டி: ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர் முதலிடம்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 3:53:50 PM (IST)

கடலில் தவறிவிழுந்து மீனவர் உயிரிழப்பு: குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி!
திங்கள் 4, டிசம்பர் 2023 4:58:43 PM (IST)
