» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நீதிமன்றம் அருகே ஜெராக்ஸ் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு: பிளஸ்-2 மாணவர் கைது!

செவ்வாய் 21, நவம்பர் 2023 8:03:56 PM (IST)

நாங்குநேரி நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே  ஜெராக்ஸ் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சன்னதி தெருவைச் சேர்ந்தவர் வானமாமலை (வயது 50). இவர் நாங்குநேரி கோர்ட்டு எதிரே, பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் ெஜராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.இன்று காலை 9 மணி அளவில் வானமாமலை, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் கடையில் இருந்தனர்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென்று கடையின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினார். அதில் ஒரு குண்டு கடையின் உள்ளே விழுந்தது. ஆனால் அது வெடிக்காததால் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மற்றொரு குண்டு கடையின் பெயர் பலகையில் விழுந்து வெடித்து சிதறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மற்றும் பக்கத்துக்கு கடைக்காரர்கள் சத்தம் போட்டனர்.

இதனால் அந்த நபர் மற்றொரு நாட்டு வெடிகுண்டை அங்கேயே ேபாட்டுவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து உடனடியாக நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெடிக்காத நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினர்.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நாங்குநேரியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 17 வயது பிளஸ்-2 மாணவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மாணவரை கைது செய்தனர். வானமாமலைக்கும், மாணவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டுகள் வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அந்த மாணவரிடம் நாட்டு வெடிகுண்டுகள் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பரபரப்பு சம்பவம் காரணமாக நாங்குநேரி கோர்ட்டு எதிரே பலத்த போலீஸ் பாதுகாப்பும் ேபாடப்பட்டு இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory