» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலை விபத்தில் பாலிமர் டிவி செய்தியாளர் மறைவு : முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

புதன் 22, நவம்பர் 2023 12:56:10 PM (IST)

கங்கைகொண்டான் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர்  முத்துக்குமார் மறைவுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்   வெளியிட்ட இரங்கல் செய்தியில், திருநெல்வேலியில் 30 ஆண்டுகளாக பல்வேறு ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி, தற்போது பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளராகப் பணியாற்றி வந்த  முத்துக்குமார்  நேற்றிரவு கங்கைகொண்டான் பகுதியில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தாழையூத்து அருகே நாய் ஒன்று குறுக்கே வந்ததால்அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் என்ற துயர செய்தியினை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன்.

சாலை விபத்தில் உயிரிழந்த  முத்துக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 இலட்சம் ரூபாய் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன். என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

தேசிய மக்கள் சக்தி கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் சேவை எஸ் பாக்கியமுத்துNov 22, 2023 - 02:37:03 PM | Posted IP 172.7*****

சகோதரன் முத்துக்குமார் மரணம் மிகவும் வருத்தம் அளிக்கிறது அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் முத்துக்குமாரன் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு இறைவன் தாமே சகலவிதமான ஆறுதல்களையும் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் அவரை சார்ந்த ஒவ்வொருவருக்கும் அருளும்படி இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அண்ணன் ஸ்டாலின் அண்ணன் அவர்களை என் கூட வாழ்த்துகிறேன் அவருடைய குடும்பத்திற்கு செய்த உதவிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory