» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் கார்த்திகேயன் வழங்கினார்!
புதன் 22, நவம்பர் 2023 4:05:54 PM (IST)

திருவித்தான்புள்ளி ஊராட்சி பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ரூ.1.33 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், திருவிருத்தான்புள்ளி ஊராட்சிப் பகுதியில் இன்று (22.11.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 24 பயனாளிகளுக்கு ரூ.1.33 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், வழங்கினார். இம்முகாமில் மொத்தம் 134 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது, இதில் 83 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது 51 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
இம்முகாமில் சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியினை, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், பார்வையிட்டார்கள்.
இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மக்களை தேடி அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கும் மற்றும் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று சேரன்மகாதேவி வட்டம், திருவிருத்தான்புள்ளி ஊராட்சிப் பகுதியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இம்முகாமில் வருவாய்துறையின் சார்பில் தனிப்பட்டா, பட்டா மாற்றம் 6 பயனாளிகளுக்கும், ஒரு பயனாளிக்கு திருமண உதவித்தொகை ரூ.10 ஆயிரமும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு; மின்னணு குடும்ப அட்டையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தலா ரூ.5,900/- மதிப்பில் 2 பயனாளிகளுக்கு விலையில்லா ஒரு பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும், 6552 மதிப்பில் தேய்ப்பு பெட்டியும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.4,440/- மதிப்பில் பாரம்பரிய நெல் இரகங்கள்-தங்க சம்பா, விசைத்தெளிப்பானும், தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.300/- மதிப்பில் 2 பயனாளிகளுக்கு மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழக்கன்றுகளும், மகளிர் திட்டம் சார்பில் 2 பயனாளிக்கு ரூ.1 இலட்சத்திற்கான மகளிர் குழு கடனுதவிகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட சமையல் கலைப் போட்டியில் வெற்றி பெற்ற ஸ்காட் கல்வியியல் கல்லூரி 3 மாணவிகளுக்கு சான்றிதழ்கள் என மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூ.1.33 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்து கிராமங்களுக்கும் முன்னுரிமை வழங்கி, வளர்ச்சி திட்டப் பணிகளை செய்து கொண்டு வருகிறது. மேலும், சிறிய விவசாயிகள், எளிய விவசாயிகள் குறுகிய கால கடன்கள் மற்றும் நீண்டகால கடன்களை வங்கிகள் வாயிலாகவும் உத்தரவுகள் வழங்கப்பட்டு, 32,000 விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 11 மாதம் தங்களது கடனின் தவணைத் தொகையினை செலுத்தினாலே, அடுத்த கடன் பெறலாம். வங்கியில் இதற்காக ஒவ்வொரு முறையும் தங்களது ஆவணங்களை சமர்ப்பிக்க தேவையில்லை. இன்னும் 6 மாத காலத்திற்குள் மேலும், 32,000 பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை, தோட்டக்கலைத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கால்நடை வாங்குதல், மாட்டுக்கொட்டகை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகளுக்கான சலுகைகளை விவசாயிகள் பெற்று அவர்களின் வாழ்வாதாரம் முன்னேறுவதற்கு விவசாயிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறப்பாக செயல்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் நோக்கம் பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 2,60,000 பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள். மேலும், தகுதியான நபர்கள் விடுபட்டிருந்தால் துறை சார்ந்த அலுவலர்களால் ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு அரசால் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பல்வேறு திட்டங்களை பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.
இம்முகாமில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது ஷபீர் ஆலம், இணை இயக்குநர் (வேளாண்மை) முருகானந்தம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாலமன் டேவிட், ஊராட்சி ஒன்றிய தலைவர் பூங்கோதை குமார், ஊராட்சி மன்ற தலைவர் இளையபெருமாள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரியம்மாள், வட்டாட்சியர் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்டம் வட்டாட்சியர் முத்துலெட்சுமி அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
