» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விவசாயி சரமாரி வெட்டிக்கொலை: வீடு புகுந்து 5 பேர் கும்பல் வெறிச்செயல்
வியாழன் 23, நவம்பர் 2023 9:00:07 AM (IST)
களக்காட்டில் வீடு புகுந்து விவசாயி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 5 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேல காடுவெட்டியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி (52), விவசாயி. இவருடைய மனைவி சங்கரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் இசக்கிபாண்டி வழக்கம்போல் தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 5 மணியளவில் அப்பகுதியில் திடீரென்று மின்தடை ஏற்பட்டது.
அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் சுமார் 5 பேர் கொண்ட மர்மகும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள், இசக்கிபாண்டியின் வீட்டுக்குள் திடீரென்று நுழைந்தனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த இசக்கிபாண்டியை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவரது சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடிவந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே இசக்கிபாண்டி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து உடனடியாக களக்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.இசக்கிபாண்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்ைட ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், இடப்பிரச்சினை காரணமாக இசக்கிபாண்டிக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக இசக்கிபாண்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் கொைலக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்ெகாண்டு வருகிறார்கள்.
இசக்கிபாண்டி கொலை செய்யப்பட்டபோது, அப்பகுதியில் மின்தடையும் ஏற்பட்டு உள்ளது. எனவே, அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் மின் வினியோகத்தை நிறுத்தி விட்டு மர்மகும்பல் இசக்கிபாண்டியை தீர்த்து கட்டினரா? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். களக்காடு அருகே வீடு புகுந்து விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)