» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்ட்த்தில் பலத்த மழை : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

வியாழன் 23, நவம்பர் 2023 10:21:03 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் "இன்று (23.11.2023) தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும் கன மழை எச்சரிக்கை உள்ளதாலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 23.11.2023 ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. 

உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு  மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory