» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் 3 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று: ஆட்சியர் வழங்கினார்!

வெள்ளி 24, நவம்பர் 2023 10:12:43 AM (IST)



நெல்லையில் 3 பள்ளி சத்துணவு மையங்களுக்கு பெறப்பட்ட ஐஎஸ்ஓ தரச்சான்றிதழினை சத்துணவு அமைப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் ஐஎஸ்ஓ 9001-2015 தரச்சான்று வழங்குவதற்காக மூன்று பள்ளி சத்துணவு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம், சேரன்மகாதேவி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, இராதாபுரம்; ஊராட்சி ஒன்றியம், திசையன்விளை ஸ்ரீ ராமகிருஷ்ணா துவக்கப் பள்ளி, மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரம் துவக்கப் பள்ளி ஆகிய மூன்று பள்ளி சத்துணவு மையங்களுக்கும் ஐஎஸ்ஓ 9001-2015 தரச்சான்று சென்னை நிறுவனத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது. 

சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட பள்ளி சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கினார். ஏற்கனவே திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்று பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) கிஷன் குமார்.சீ., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு), திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையர், மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள்; கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory