» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலை விபத்தில் இறந்த செய்தியாளர் குடும்பத்திற்கு நிதியுதவி: சபாநாயகர் வழங்கல்!

வெள்ளி 24, நவம்பர் 2023 12:51:01 PM (IST)



சாலை விபத்தில் உயிரிழந்த பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் முத்துக்குமாரசாமி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் அறிவித்த ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை சபாநாயகர் அப்பாவு வழங்கி, ஆறுதல் கூறினார்.

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே சாலை விபத்தில் உயிரிழந்த பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் முத்துக்குமாரசாமி அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் இன்று ( 24.11.2023) பாளையங்கோட்டை என்.ஜி.ஓ ஏ காலனிக்கு நேரில் சென்று வழங்கி, ஆறுதல் கூறி தெரிவித்ததாவது:-

திருநெல்வேலியில் 30 ஆண்டுகளாக பல்வேறு ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி, தற்போது பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளராகப் பணியாற்றி வந்த முத்துக்குமாரசாமி அவர்கள் கடந்த 21.11.2023 அன்று கங்கைகொண்டான் பகுதியில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தாழையூத்து அருகே நாய் ஒன்று குறுக்கே வந்ததால், அவர் நிலை தடுமாறி, சாலையில் விழுந்து, படுகாயமடைந்து உயிரிழந்தார்.

இந்நிகழ்வினை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டதோடு, அன்னாரது குடும்பத்தினருக்கு ரூ.3 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில், இன்று அன்னாரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கப்பட்டது. என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்கள். இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் ஷேக் அயூப், பாளையங்கோட்டை வட்டாட்சியர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory