» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாட்கோ மூலம் ரூ.17.98கோடி கடன் வழங்கல் : நெல்லை மாவட்ட மேலாளர் தகவல்!

வெள்ளி 24, நவம்பர் 2023 4:49:17 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் தாட்கோ மூலம் 543 பயனாளிகளுக்கு வங்கி கடனாக ரூ.17 கோடிய 98லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அக்கடனில் தாட்கோ மானியக்கடன் தொகையாக ரூ.7,36,39,000/-  வழங்கப்பட்டுள்ளது என தாட்கோ மேலாளர்  செல்வி  தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மக்களுக்கு தாட்கோ மூலம் இணையதளம் வாயிலாக http:/application.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாதம் ஒருமுறை நேர்காணல் நடத்தி அதில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து தகுதியிருப்பின் மானியம் வழங்கப்படுகிறது. பின்பு வங்கிக்கு விண்ணப்பங்கள் அனுப்பி அதன் மூலம் வங்கியில் படிவம்-3 பெறப்பட்ட பின்பு மேற்கண்ட மானியம் ஒரு லட்சத்துக்கு ரூ.30,000/- வீதம் (சதவீதம் 30மூ) அதிகபட்சம் ஆதிதிராவிடர்களுக்கு ரூ.2,25,000/-ம் மானியமும் பழங்குடியினருக்கு 35% அதிகபட்சமாக ரூ.3,75,000/-ம் வழங்கப்படுகிறது. 

அதனடிப்படையில் கடந்த 2021-22-ம் நிதியாண்டில் 277 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது. 156 நபர்கள் கலந்து கொண்டார்கள் என்றும், அவ்விண்ணப்பங்களில் 111 நபர்களை வங்கிக்கு தேர்வு செய்து படிவம்-3 பெறப்பட்டு வங்கி கடன் ரூ.2,87,62,000/-ம் அதில்  தாட்கோ மானியம் ரூ.13,750,000/- வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று 2022-23-ம் நிதியாண்டில் திட்டத்தின் கீழ் 530 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டு வங்கி மூலம் 300 (விண்ணப்பங்கள்) பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வங்கி கடனாக ரூ.9,98,78,000/-ம் வழங்கப்பட்டு  தாட்கோ மூலம் மானியத் தொகை ரூ.3,94,46,000/-ம் வழங்கப்பட்டுள்ளது. 

2023-24 நிதி ஆண்டில் 01.04.2023 முதல் 31.10.2023 வரை 7 மாதங்களில் 458 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 140 விண்ணப்பங்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர். இதில் மேற்கண்ட விண்ணப்பங்கள் வங்கிக்கு அனுப்பப்பட்டு வங்கியின் மூலம் 132 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில் அவர்களுக்கு வங்கி கடனாக ரூ.5,12,45,000/-ம் தாட்கோ மானியத் தொகை ரூ.2,04,43,000/-ம் விடுவித்து ஆணையிடப்படுகிறது.  கடந்த மூன்று ஆண்டுகளில்  543 பயனாளிகளுக்கு வங்கி கடனாக ரூ.17,98,85,000/-ம் வழங்கப்பட்டுள்ளது. அக்கடனில் தாட்கோ மானியக்கடன் தொகையாக ரூ.7,36,39,000/- வழங்கப்பட்டு 543 பயனாளிகளின் வாழ்வாதாரம் முன்னேறி உள்ளது.

தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவி குழு திட்டம் போன்ற திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவர்கள் இணையதளம் வாயிலாக http:/application.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட தாட்கோ மேலாளர் செல்வி  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

Man kandan.kApr 28, 2025 - 11:03:36 AM | Posted IP 162.1*****

Soya tholil

Mani kantanApr 28, 2025 - 11:02:44 AM | Posted IP 162.1*****

சுயல் தொழில்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory