» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீட்டில் கருகிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு - போலீஸ் விசாரணை!
வெள்ளி 24, நவம்பர் 2023 4:55:32 PM (IST)
நாங்குநேரி அருகே வீட்டில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளம் நடுத்தெருவை சார்ந்தவர் உய்க்காட்டான். இவரது மனைவி முருகம்மாள். இவர்கள் மகன் வேல்முருகன், மகள் கார்த்திகா (25). ஊய்க்காட்டான் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் பணியின் போது இறந்ததால் அவரது மகன் வேல்முருகன் வாரிசு அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார்.
கார்த்திகா பட்டப் படிப்பை முடித்துவிட்டு ஊரில் பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார். அவருக்கு வேல்முருகன் திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் வேலைக்கு சென்ற நிலையில், அவரது தாய் முருகம்மாளும் அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார். இதையடுத்து அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கார்த்திகா தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகம்மாள் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அவர்கள் உடனடியாக நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆதம் அலி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கார்த்திகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
