» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரிப்பு: கட்டுப்படுத்தக் கோரி நூதன போஸ்டர்!

சனி 25, நவம்பர் 2023 10:49:17 AM (IST)



நெல்லையில் தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாநகர பகுதியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல்லை வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு, பாலபாக்யாநகர் பகுதி, நெல்லை டவுன், பழையபேட்டை பகுதி, தச்சநல்லூர் உலக அம்மன் கோவில் பகுதி, பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளைநகர், மேலப்பாளையம் சந்தை முக்கு, மாட்டுச்சந்தை, அண்ணாநகர், அம்மன்கோவில் தெரு, ஆமீன்புரம், கொட்டிகுளம், வாய்க்கால்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. 

இந்நிலையில் நெல்லையில் தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நாய்களின் புகைப்படம் மற்றும் அவற்றின் குணம் குறித்து விளக்கமாக தெரிவிக்கப்டப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory