» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா!

திங்கள் 27, நவம்பர் 2023 9:55:34 AM (IST)



கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் திருக்கார்த்திகை நேற்று நடைபெற்றது.  இதனை முன்னிட்டு கோவிலில் சங்கரலிங்க சுவாமி சன்னதி, சங்கரநாராயண சாமி, கோமதி அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.  திருக்கார்த்திகை முன்னிட்டு நேற்று இரவு சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி முன்பு சொக்கப்பனை  ஏற்றப்பட்டது.  

முன்னதாக சுவாமி, அம்பாள் சொக்கப்பனை ஏற்றப்படும் இடத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது.  இதனை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து வீதி உலாவும் நடைபெற்றது.  இதில்  பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory