» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுற்றுலா நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு

திங்கள் 27, நவம்பர் 2023 4:34:19 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் இயங்கும் சுற்றுலா நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்  வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு சுற்றுலாத் துறையானது மாநிலத்தின் சுற்றுலாப் பிரிவுகளின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு முக்கியமான முன்முயற்சியாக தமிழ்நாடு டூர் ஆபரேட்டர்கள், டிராவல் ஏஜென்ட்கள் மற்றும் சுற்றுலாப் போக்குவரத்து ஆபரேட்டர்கள் ஆகியோர்கள் சுற்றுலாத்துறையின் கீழ் பதிவு செய்து ஒருங்கிணைந்து இயங்குவது தொடர்பான திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சுற்றுலா நடவடிக்கைகளை சீரமைப்பதன் மூலம் அனைத்து பங்குதாரர்களுக்கும் சுற்றுலா பாதுகாப்பான அனுகல் மற்றும் நிலையானதாக இருக்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்களுக்கு திட்டங்களை உருவாக்கி மேலும் பதிவு செய்வதற்கான அரசு ஆணைகளை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. அரசு ஆணைகளின்படி பல்வேறு ஆபரேட்டர்களுக்கு வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு, ஆபரேட்டர்களின் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் இத்திட்டம் செப்டம்பர் 27, 2023 உலக சுற்றுலா தின கொண்டாட்டங்கள்  அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. ஆபரேட்டர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பதிவு செய்தல் ஆகியவை அதிகாரப்பூர்வ தமிழ்நாடு சுற்றுலா ஆபரேட்டர் பதிவு இணையதளம் https://www.tntourismtors.com வழியாக பெறலாம். அனைத்து டூர் ஆபரேட்டர்களும் அரசு ஆணையின் வழிகாட்டுதல்படி  பதிவு செய்யப்படவேண்டும்.

இது தொடர்பான விளக்க கூட்டம் 07.12.2023 அன்று மாலை 4.00 மணி அளவில் ஹோட்டல் தமிழ்நாடு, மாவட்ட ஆட்சியர் வளாகம், கொக்கிரகுளத்தில்  நடைபெறும் என்றும் மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திருநெல்வேலி (தொலைபேசி எண்: 0462 2500104, போன் : 9176995877) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory