» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆதிதிராவிட இளைஞர்கள் மீது தாக்குதல்: தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 3:05:30 PM (IST)
ஆதிதிராவிட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், மாரியப்பன் ஆகியோர் உயர் வகுப்பினர் வசிக்கும் பகுதி வழியாக சென்றுள்ளனர் அப்போது அங்கு வந்த உயர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவர்களை நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்து, கொலை வெறி தாக்குதல் நடத்தி, மிரட்டிப் பணம் மற்றும் கைபேசிகளைப் பறித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தலித் மக்களுக்கு இடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதோடு நெல்லை மாவட்டத்தில் தொடர்ச்சியாக தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நடந்து வருவதை வெட்ட வெளிச்சமாக எடுத்துரைக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பும் கடமையும் காவல்துறைக்கு உள்ளது ஆனால் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் மீது அதிகாரிகள் உரிய கவனம் செலுத்துவதில்லை நீதிமன்றங்களில் சாட்சியை கோர்ப்பதில்லை என்ற குற்றச்சாற்று தொடர்ச்சியாக பதிவிடப்பட்டு வருகிறது.
சாதி வெறி பிடித்த மிருகங்களின் இது போன்ற காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைகள் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளது.இது திராவிட மாடல் ஆட்சி சமூக நீதி ஆட்சி என்று கூறி வரும் இந்த ஆட்சியில் தொடர்ச்சியாக தலித் மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் திட்டமிட்டு தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வருவது தலித் மக்களை மிகவும் அச்சத்துக்கு உள்ளாக்கி வருகிறது.
தமிழக அரசு தொடர்ச்சியாக பட்டியல் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாவட்டமாக நெல்லை மாவட்டத்தை அறிவித்து அங்கு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தீண்டாமை வன்கொடுமைகள் நிகழாத வண்ணம் தடுக்க உரிய முயற்சியை மேற்கொள்வதோடு இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இவர்களுக்கு நீதிமன்ற பிணை கிடைக்காமல் உரிய நேரத்தில் வழக்கின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுத்தால் மட்டுமே இதுபோன்று சம்பங்களை தடுக்க முடியும்.
எனவே தமிழக அரசும், காவல்துறையும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் குற்றவாளிகள் பிணையில் வெளிவராமல் உடனடியாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கில் கடுமையான தண்டனையை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தமிழக அரசையும், காவல்துறையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதோடு நெல்லை மாவட்டம் தீண்டாமை வன்கொடுமையால் பாதிக்கப்படும் மாவட்டம் என்று அறிவிக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
