» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் பால் வியாபாரி வெட்டிக் கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சனி 2, டிசம்பர் 2023 12:09:11 PM (IST)
திருநெல்வேலியில் பால் வியாபாரி மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது...
திருநெல்வேலி நகரம் காவல்பிறை தெருவைச் சோ்ந்தவா் பழனி. இவரது மகன் கண்ணன் (33). பால் வியாபாரியான இவா், கடந்த சில மாதங்களாக திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் கோசாலையில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வந்தாா். நேற்று இரவு வீட்டில் வேலைகளை முடித்து விட்டு அருகில் உள்ள மாடத் தெருவில் நடந்து சென்றாராம்.
அப்போது, பின்னால் வந்த மா்மநபா்கள் கண்ணனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். சம்பவ இடத்திற்கு வந்த இறந்தவரின் உறவினா்கள் உடலை எடுக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுடன் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) சரவணக்குமாா், உதவி ஆணையா் ஆவுடையப்பன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்படுவா் என தெரிவித்தனா்.
அதன் பின் இறந்தவரின் உடலை போலீஸாா் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
