» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடலில் தவறிவிழுந்து மீனவர் உயிரிழப்பு: குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி!

திங்கள் 4, டிசம்பர் 2023 4:58:43 PM (IST)கடலில் தவறி விழுந்து உயிரிழந்த கூத்தன்குழி மீனவர் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் நிவாரண நிதியுதவியை சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார். 

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது தவறி கடலில் விழுந்து கூத்தன்குழி மீனவ கிராமத்தை சார்ந்த பிச்சையா மகன் சிலுவை தஸ்நெவிஸ் என்பவர் உயிரிழந்தார். இந்நிலைியல் அவரது மனைவி ரோஜா என்பவருக்கு தமிழ்நாடு மீனவர் நலவாரிய விபத்து நிவாரணத்தொகையாக ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு இன்று கூத்தன்குழி மீனவ கிராமத்தில் நேரில் சென்று வழங்கி, ஆறுதல் கூறினார். 

இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இராதாபுரம் வட்டாட்சியர் இசக்கிபாண்டி, மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் இராஜதுரை, முக்கிய பிரமுகர் ஜோசப் பெல்சி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory