» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாநில யோகா போட்டி: ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர் முதலிடம்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 3:53:50 PM (IST)

குற்றாலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர் சாய் விஜய் முதலிடம் பெற்றார்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் அனுசாரா யோகா விளையாட்டு மேம்பாட்டு கழகம், இந்தியன் யோகா சங்கம் சார்பில் மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர் கே.ஆர்.சாய் விஜய் முதலிடம் பெற்றார். இவருக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவரை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, குமரி மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா : தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது!
வியாழன் 1, ஜனவரி 2026 12:35:05 PM (IST)

அரசுப் பேருந்துகளுக்கு பாஸ்டேக்கில் தேவையான இருப்பு உள்ளது : பொதுமேலாளர் தகவல்
புதன் 31, டிசம்பர் 2025 4:06:18 PM (IST)

நெல்லை சரக புதிய டிஐஜியாக சரவணன் நியமனம்!
புதன் 31, டிசம்பர் 2025 12:19:33 PM (IST)

நெல்லை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.2 இலட்சம் நன்கொடை!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:15:31 PM (IST)

பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்!
திங்கள் 29, டிசம்பர் 2025 5:07:43 PM (IST)

நெல்லையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் : டிஆர்ஓ தகவல்
திங்கள் 29, டிசம்பர் 2025 12:18:32 PM (IST)


