» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மக்களவைத் தோ்தலில் சமக தனித்து போட்டியா? டிச.9 இல் சரத்குமார் அறிவிப்பு!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:15:47 PM (IST)
திருநெல்வேலியில் வரும் 9ம் தேதி நடைபெறும் சமத்துவ மக்கள் கட்சியின் மக்களவைத் தோ்தல் பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் பங்கேற்கிறார்.
இதுதொடா்பாக அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலா் சுந்தா் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் கூறியது: சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள் அறிமுக பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் இம் மாதம் 9 ஆம் தேதி மாலையில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் கட்சியின் நிறுவனா் தலைவரும், நடிகருமான சரத்குமாா் பொறுப்பாளா்களை அறிமுகப்படுத்திப் பேசுகிறாா்.
அப்போது, 2024 மக்களவைத் தோ்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணியா என்பது குறித்து அவா் அறிவிப்பாா். தென் மாவட்டங்களில் தொழில் வளத்தை பெருக்கினால் ஜாதி, மத மோதல்களை கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில் போதை பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதைத் தடுக்க அரசு போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மூன்று மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாஜக வெற்றி பெற்ற்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். இந்த வெற்றி தமிழகத்தில் வரும் மக்களவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை தற்போது கூற முடியாது என்றாா்.
பேட்டியின்போது, மாநில நிா்வாகி நட்சத்திர வெற்றி, மாநகா் மாவட்டச் செயலா் சரத் ஆனந்த், நிா்வாகிகள் ஜெயந்திகுமாா், வில்சன், தயாளன், அரசன் பொன்ராஜ், சிவஞானகுருநாதன், அழகேசராஜா உள்பட பலா் உடனிருந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)
