» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் பாரத் அரிசி விற்பனை வாகனம் : பொதுமக்கள் வரவேற்பு!

சனி 2, மார்ச் 2024 4:53:20 PM (IST)



தூத்துக்குடியில் மானிய விலை பாரத் அரிசி விற்பனை வாகனத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். 

அரிசி பருப்பு கோதுமை மாவு வெளி சந்தை விலை உயர்வினை கருத்தில் கொண்டு நாபர்டு மூலம் எளிய மக்கள் பயன் பெறும் வகையில், மத்திய அரசு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மானிய விலை அரிசித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 1 கிலோ அரிசி ரூ.29-க்கும், கடலை பருப்பு 1 கிலோ 60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தூத்துக்குடி நகரில் விற்பனை செய்ய வந்த வாகனத்தை தெப்பகுளத் தெரு பஜனை மட காரியதரிசி எஸ்.ஆர்.எஸ். பாலாஜி, வீர வாஞ்சி தேச பக்த பேரவை நிறுவன அமைப்பாளர் ரெங்கராஜன் பாலாஜி மற்றும் ஓய்வு பெற்ற மாநகராட்சி அலுவலர் குருமூர்த்தி வரவேற்றனர். மானிய விலை அரிசி, கோதுமை, கடலை பருப்பு போன்ற பொருட்களை பெற்று கொண்ட பொதுமக்கள் அரசின் சேவையை வாழ்த்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஏரல் பகுதி பாஜகவின் நபார்டு பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து

Rajaram Rajaram SivakasiMar 4, 2024 - 11:47:42 AM | Posted IP 172.7*****

சார் எங்க ஊருக்கு எப்ப இந்த திட்டம் கிடைக்கும் என்று கூறுங்கள்

Jayavelu. KMar 3, 2024 - 07:10:43 PM | Posted IP 172.7*****

Super👌👌👌👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

SathriyanMar 2, 2024 - 05:16:54 PM | Posted IP 172.7*****

அரிசி கோதுமை இதற்கு ஜிஎஸ்டி வரி இல்லாமல் மக்கள் பயன்பாட்டுக்கு கொடுத்தலே போதுமானது

SathriyanMar 2, 2024 - 05:16:53 PM | Posted IP 172.7*****

அரிசி கோதுமை இதற்கு ஜிஎஸ்டி வரி இல்லாமல் மக்கள் பயன்பாட்டுக்கு கொடுத்தலே போதுமானது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory