» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மது குடித்ததை மனைவி கண்டித்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை!!
திங்கள் 4, மார்ச் 2024 9:51:23 AM (IST)
வாசுதேவநல்லூர் அருகே விஷம் குடித்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே நாராணபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கையா தேவர் மகன் ராமகிருஷ்ணன் (58). விவசாயி . இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவரின் நாலு பிள்ளைகளில் ஒரு மகன் ஊட்டி போலீசில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
நேற்று உறவினர் இறந்ததற்கான விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ராமகிருஷ்ணன் அளவுக்கு அதிகமாக மது குடித்தருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ராமகிருஷ்ணன் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் (பொ) சண்முக லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)
