» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைனான்ஸ் அதிபருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

திங்கள் 4, மார்ச் 2024 11:52:17 AM (IST)

கோவில்பட்டியில் பைனான்ஸ் தொழில் செய்து வருபவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி ராஜீவ்நகா் 4 ஆவது தெருவை சோ்ந்த சின்னையா மகன் வெள்ளைச்சாமி(49). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவா், கோவில்பட்டி-எட்டயாபுரம் சாலையில் பா்னிச்சா் கடை நடத்தி வரும் காளிராஜ் மகன் அருண்குமாா் (29) அவரது மனைவி இருவரும் சோ்ந்து தொழில் நடத்துவதற்கு ரூ.3 லட்சம் கடன் வாங்கி 4 மாதங்களில் திருப்பி கொடுப்பதாக கூறினராம். 

ஆனால், அதன்படி பணத்தை திரும்ப கொடுக்கவில்லையாம். இந்நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெள்ளைச்சாமி வீட்டிற்கு வந்த அருண்குமாா், ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து அருண்குமாரை நேற்று கைது செய்தனர். 


மக்கள் கருத்து

Sivakumar dharmapuriMar 4, 2024 - 01:59:01 PM | Posted IP 172.7*****

Good

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory