» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை-நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லா சிறப்பு ரயில்கள் ரத்து
வெள்ளி 29, மார்ச் 2024 8:28:48 AM (IST)
நெல்லை- நாகர்கோவில் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆரல்வாய்மொழி- கன்னியாகுமரி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை சில ரயில்கள் ரத்துசெய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவில் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 10.35 மணி மற்றும் இரவு 6.50 மணிக்கு புறப்பட்டு, நெல்லை வரும் முன்பதிவில்லா சிறப்பு ரயிலும் ரத்துசெய்யப்படுகிறது.
அதே போல, கன்னியாகுமரியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, கொல்லம் செல்லும் சிறப்பு ரயில் நாளை (சனிக்கிழமை) முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. அதே தேதிகளில் கொல்லத்தில் இருந்து காலை 11.35 மணிக்கு புறபட்டு, கன்னியாகுமரி வரும் சிறப்பு ரயிலும் ரத்துசெய்யப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்பட்டு, கன்னியாகுமரி செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு, கொச்சுவேலி வரும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து
தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் (20691) வருகிற 31-ந்தேதி வரை நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது. அதே போல, சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவில் வரும் வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12689) இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் செல்லும் அந்தியோதியா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் இன்று முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை நெல்லையில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும். அதே போல நாகர்கோவிலில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12690) மார்ச் 31-ந்தேதி மட்டும் நெல்லையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)
