» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாட்டு வெடிகுண்டு தயாரித்த 4 பேர் கைது: பள்ளி வளாகத்தில் குண்டு வீசியது அம்பலம்!
திங்கள் 1, ஏப்ரல் 2024 11:41:10 AM (IST)
வீகே புதூர் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த 4 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் சாலையில் சார்பு ஆய்வாளர் கௌசல்யா தலைமையிலான காவல்துறையினர் நேற்று வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை விட முயற்சித்தனர். காவல்துறையினரை கண்டதும் தப்பித்து ஓட முயன்ற சுரேஷ் என்பவரை பிடித்து அவரது இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சுரேஷிடம் விசாரணை செய்ததில் சுரண்டையில் நாகராஜ் என்பவரிடமிருந்து வெடி மருந்துகள் வாங்கி 8 நாட்டு வெடிகுண்டுகளாக தயார் செய்து, அதில் இரண்டு குண்டுகளை மனோ சங்கர் என்பவரிடமும் ஒரு குண்டு கார்த்திக் என்பவரிடமும் கொடுத்து வைத்திருப்பதாகவும், மூன்று குண்டுகளை 30.03.24 அன்று வீராணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்திற்குள் சுரேஷ் மற்றும் கார்த்திக் சேர்ந்து வெடித்து பள்ளி சுவற்றை சேதம் ஏற்படுத்திய தாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் வீராணம் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த நாகராஜா என்பவரின் மகன் சுரேஷ்(34), கிருஷ்ணசாமி என்பவரின் மகன் கார்த்திக்(25), சுரண்டை பாண்டியன் என்பவரின் மகன் மனோ சங்கர்(19) மற்றும் சுரண்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி என்பவர் மகன் நாகராஜா(35) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மணப்பாட்டில் யூபிலி 2025ஆம் ஆண்டு நிறைவு மதுவிலக்கு பேரணி
சனி 27, டிசம்பர் 2025 5:50:27 PM (IST)

திருநெல்வேலியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் சுகுமார் ஆய்வு
சனி 27, டிசம்பர் 2025 5:23:34 PM (IST)

நெல்லை அரசு டவுன் பஸ்சில் முதல் பெண் கண்டக்டர் : சாதனை படைக்கும் சிங்கப்பெண்!!
சனி 27, டிசம்பர் 2025 8:51:46 AM (IST)

உறவினர் காதை கத்தியால் வெட்டிய போலீஸ் ஏட்டு: நெல்லையில் பரபரப்பு
சனி 27, டிசம்பர் 2025 8:50:11 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் 310.45 மி.மீ மழை பெய்துள்ளது: ஆட்சியர் தகவல்
வெள்ளி 26, டிசம்பர் 2025 5:24:20 PM (IST)

திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:54:01 AM (IST)


