» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மோடிக்கு நல்ல தமிழ் அசிரியரை அனுப்புகிறோம் : பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு!!
திங்கள் 1, ஏப்ரல் 2024 3:12:53 PM (IST)

பிரதமர் மோடிக்கு நல்ல தமிழ் அசிரியரை அனுப்புகிறோம், தமிழ் மொழி கற்றுக் கொள்ளட்டும் என பிரச்சாரத்தில் கனிமொழி பேசினார்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி மக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார். அப்போது கனிமொழி பேசியதாவது: ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் நிதியாக அளிக்கும் பொழுது நமக்கு 25 பைசா மட்டுமே நிதி பகிர்வாக அளித்து வருகிறது. ஆனால் ஒன்றியத்தில் உள்ள பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் வரி செலுத்தினால் இரண்டு ரூபாய் என இரட்டிப்பு நிதி பகிர்வு அளித்து, தமிழ்நாட்டை ஓரவஞ்சனை செய்கிறது. தமிழ்நாடு கடந்த டிசம்பர் மாதம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது, அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் மக்களின் பாதிப்புகளைப் பார்க்காத பிரதமர், தேர்தல் சமயம் என்றவுடன் 10 முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்று உள்ளார்.
மோடிக்குத் தமிழ் தெரியவில்லை என்று வருத்தமாக உள்ளதாம், தமிழ் மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் தமிழ்நாட்டில் பிறந்திருக்க வேண்டுமாம், பின் ஏன் இந்தி மொழியை நம் மீது திணிக்கப் பார்க்கிறார்கள். இப்போது கூட ஒரு பிரச்சனையும் இல்லை ஒரு நல்ல ஆசிரியரை அனுப்புகிறோம் தமிழ் கற்றுக் கொள்ளட்டும் மோடி. பிரதமர் மோடி அளித்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
பாஜகவும் - அதிமுகவும் பிரிந்துவிட்டதாக கூறுவது நாடகமானது, தேர்தல் முடிந்த பிறகு அதிமுக பாஜகவை ஏற்றுக் கொள்ளும், தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளும் எடப்பாடி எங்காவது பாஜகவைப் பற்றியோ, மோடியை பற்றியோ வாய் திறக்கவில்லை. அதிமுகவும் பாஜகவும் ஒன்றுதான், இரண்டுமே ஸ்டிக்கர் கட்சிகள், முன்னாள் மாற்றுக் கட்சியின் அரசு கொண்டு வந்த திட்டங்களை பெயர் என்னும் ஸ்டிக்கர் ஒட்டி தாங்கள் கொண்டு வந்தது போலக் காட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு கனிமொழி தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
சனி 21, மார்ச் 2026 4:39:16 PM (IST)

கல்லிடைக்குறிச்சியில் ரமலான் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சனி 21, மார்ச் 2026 12:44:36 PM (IST)

பங்குனி உத்திரத் திருவிழா: ஏப்ரல் 1-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
வெள்ளி 20, மார்ச் 2026 5:03:53 PM (IST)

அனுமதி பெறாத வாகனங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:27:46 PM (IST)

மின்சாரத்தைத் துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்களைத் திருடிச் சென்ற மர்ம கும்பல்: நெல்லையில் துணிகரம்!
வெள்ளி 20, மார்ச் 2026 8:34:32 AM (IST)

வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் - 12 மாற்று ஆவணங்கள் அறிவிப்பு!
வியாழன் 19, மார்ச் 2026 5:40:58 PM (IST)


ஓ அப்படியாApr 2, 2024 - 08:58:45 AM | Posted IP 162.1*****