» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களுக்கு தென்காசி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
திங்கள் 1, ஏப்ரல் 2024 5:21:13 PM (IST)
தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணையமானது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கிணங்க, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவை மற்றும் தண்டனை பெறப்பட்டவை உள்ள வேட்பாளர்கள், குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பின்வரும் படிவங்களை வரையறுத்துள்ளது.செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வேட்பாளர்கள் வெளியீடு செய்ய படிவம் C-1, செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் அரசியல் கட்சி வெளியீடு செய்ய படிவம் C-2, தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலக பயன்பாட்டிற்காகபடிவம் C-3, குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியீடு செய்தது தொடர்பாக வேட்பாளரின் அறிக்கைபடிவம் C-4, குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியீடு செய்தது தொடர்பாக அரசியல் கட்சியின் அறிக்கை படிவம் C-5, தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலக பயன்பாட்டிற்காகபடிவம் C-6, படிவம் C-7, குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் மற்றும் கட்சியின் வலைதளங்களில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அல்லது வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் நாளில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பாக,
இவற்றில் எது முதன்மையானதோ அதன்படி வெளியிடப்படவேண்டும். படிவம் C-8 குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியீடு செய்தது தொடர்பான அரசியல் கட்சியின் அறிக்கையினை வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து 72 மணி நேரத்திற்குள் அல்லது வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பாக, வேட்பாளர்கள் தங்களது குற்ற வழக்குகள் தொடர்பான விபரங்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் உரிய படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.
குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள் மேற்படி வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் தொடர்பான விபரங்களை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் மற்றும் தங்களது அரசியல் கட்சியின் வலைதளங்களிலும் உரிய படிவங்களில் விளம்பரம் செய்தல் வேண்டும். மேற்படி விளம்பரங்கள் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி தினத்திற்கு மறுநாள் முதல் வாக்குப்பதிவு முடிவுறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை மூன்று முறை கீழ்க்கண்ட நாட்களில் வெளியிடப்பட வேண்டும்.
1. முதல் வெளியீடு: வேட்புமனு விலகல் பெறப்பட்ட நாளிலிருந்து நான்கு நாட்களுக்குள் அதாவது 31.03.2024 முதல் 03.04.2024முடிய உள்ள நாட்களுக்குள் வெளியிடப்பட வேண்டும்.
2. இரண்டாவது வெளியீடு, வேட்புமனு விலகல் பெறப்பட்ட நாளிலிருந்து 5 முதல் 8 நாட்களுக்குள் அதாவது 04.04.2024 முதல் 07.04.2024 முடிய உள்ள நாட்களுக்குள் வெளியிடப்படவேண்டும்.
3. மூன்றாவது வெளியீடு, வாக்குப்பதிவு வேட்புமனு விலகல் பெறப்பட்ட 9 வது நாளிலிருந்து தேர்தல் பரப்புரையின் கடைசி நாளுக்குள் (வாக்குப்பதிவு முடிவுறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு) அதாவது 08.04.2024 முதல் 17.04.2024முடிய உள்ள நாட்களுக்குள் வெளியிடப்பட வேண்டும்.
மேற்காணும் பொருள் தொடர்பான இந்திய தேர்தல் ஆணையத்தின் முழுமையான அறிவுரைகள் மற்றும் பதிப்புகள் வாரியான தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள், தொலைக்காட்சி அலைவரிசைகளின் பட்டியலை www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




