» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மழை, வெள்ள காலங்களில் எட்டிக்கூட பார்க்காத மோடி: உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 11:40:09 AM (IST)மழை, வெள்ள காலங்களில் தமிழகத்தை எட்டிக்கூட பார்க்காத பிரதமர் மோடிக்கு பாடம் புகட்டுவோம் என்று நெல்லை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். 

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும்  இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், "பாசிசத்தின் பிடியிலிருந்து இந்தியாவைக் மீட்கும் இறுதி வாய்ப்பே வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் களம். மக்களையும் – மாநிலத்தையும் அடிமைப்படுத்த துடிக்கும் பாசிஸ்ட்டுகளை வீட்டிற்கு அனுப்ப  இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று பேசினார். 

மேலும், மழை, வெள்ள காலங்களில் எட்டிக்கூட பார்க்காமல் கேரண்டி – வாரண்டிகளை தூக்கிக் கொண்டு ஓட்டுக்காக மட்டுமே தமிழ்நாட்டை வலம் வரும் பாசிச கூட்டத்திற்கு வேட்டு வைக்க "கை" சின்னத்திற்கு வாக்களிப்போம் என்று பேசினார். இதில் திமுக, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory