» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடும்ப தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது!

திங்கள் 20, மே 2024 4:41:33 PM (IST)

விளாத்திகுளம் அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு பாண்டி (51). லாரி டிரைவராக உள்ளார். இவருடைய மனைவி கூரியம்மாள் (46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கணவன்- மனைவி மட்டும் ராமச்சந்திரபுரத்தில் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அழகு பாண்டி, தனது மனைவியான கூரியம்மாளை வீட்டில் கிடந்த கம்பால் பலமாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் வீட்டில் இருந்த சேலையால் அவரது கழுத்தை இறுக்கி மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அழகுபாண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கூரியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அழகுபாண்டியை தேடி வந்தனர். இந்நிலைியல் அவர் விளாத்திகுளம் போலீசில் சரண் அடைந்தார். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory