» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
லாரி டிரைவர் குத்திக் கொலை: சிறுவன் உள்பட 3 பேர் கைது
செவ்வாய் 21, மே 2024 8:13:35 AM (IST)
ஆலங்குளம் அருகே லாரி டிரைவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை வடக்கு காலனியை சேர்ந்தவர் ராமையா மகன் பேச்சிக்குட்டி (23). லாரி டிரைவரான இவரும், இவரது நண்பர்களும் கடந்த 18-ந் தேதி வீட்டின் அருகே மது அருந்தி உள்ளனர். இதனை பார்த்ததும் பக்கத்து வீட்டை சேர்ந்த சண்முகையா மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. இதில் சண்முகையா, சுரேஷ் ஆகியோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் சண்முகையா தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இருதரப்பினரையும் சமாதானமாக பேசி அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு சண்முகையாவின் உறவினர்கள் சிலர் பேச்சிக்குட்டியின் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தனர். இதனை கண்ட பேச்சிக்குட்டிக்கும், சண்முகையா உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் சண்முகையா தரப்பினர் பேச்சிக்குட்டியின் இடுப்பில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன், சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பேச்சிக்குட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சண்முகையாவின் உறவினர்களான அதே ஊரைச் சேர்ந்த பிச்சையா மகன் ஜெயராம் (26), ஆறுமுகம் (47), மகாராஜன், மகேஷ் மற்றும் 17 வயது நிரம்பிய சிறுவன் உள்ளிட்ட சிலர் சேர்ந்து பேச்சிக்குட்டியை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து கொலையாளிகளை போலீசார் தேடிய நிலையில் ஜெயராம், ஆறுமுகம் மற்றும் சிறுவனை நேற்று கைது செய்தனர். மகாராஜன், மகேஷ் உள்ளிட்ட சிலரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 19, ஏப்ரல் 2025 12:52:34 PM (IST)

ஜவுளிக்கடை உரிமையாளர் தலை துண்டித்து கொலை: இளம்பெண் கைது
சனி 19, ஏப்ரல் 2025 9:03:58 AM (IST)

பொதுமக்களுக்கு உதவிட சட்டபணிகள் ஆணைய குழு தயார்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:32:31 PM (IST)

முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)
