» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லிடைக்குறிச்சியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

திங்கள் 17, ஜூன் 2024 10:18:46 AM (IST)கல்லிடைக்குறிச்சியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் கீழ தைக்கால் தெரு ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் தலைமை இமாம் எஸ். முஹம்மது முஜம்மில் குத்பா ஓதீனார். துணை இமாம் எஸ். முஹம்மது ஹசன் தொழுகையை நடத்தினார். 

இதில், கல்லிடைக்குறிச்சி நூருல்ஹிதாயா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் மு. ரஹ்மத் ரபீக், ஜமாத் தலைவர் அ. நாகூர்கனி, செயலர் அ. ஷேக் செய்யது அலி, துணைத் தலைவர் அ. நாகூர்மீரான், பொருளாளர் என். அஜிஸ், தணிக்கையாளர் கே.பி.எஸ். முகம்மது ஹூசைன், நிர்வாகிகள் மற்றும் ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு ஜமாத் நிர்வாகிகள் பரிசுகள், கேடயம் வழங்கிப் பாராட்டினர். இதையடுத்து, வீடுகளில் குர்பானி கொடுக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory