» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா
திங்கள் 8, ஜூலை 2024 7:59:15 AM (IST)

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துதை ஒட்டி முப்பெரும் விழா நடைபெற்றது.
காவல்துறை ஆய்வாளர் ஆழ்வார் பேரூராட்சி தலைவர் பார்வதி முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் கல்லிடைக் குயில் உமர் பாரூக் தலைமை தாங்கினார். செயலாளர் விஸ்வநாதன் வரவேற்றார். தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனரும் துபாய் சமூக நல ஆர்வலருமான முனைவர் முகமது முகைதீன் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் மஞ்சள் பை பயன்படுத்துவோம் என்ற முனைப்பை வலியுறுத்தி பேசினார். பேரூராட்சி துணைத் தலைவர் இசக்கிப் பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.
நிர்வாகிகள் சமது, ஷரீப், மோகன், ரசாக், டாக்டர் பத்மநாபன், ஷாகித், ஞான ராஜ், கார்த்திக், சாய் சுரேஷ், ஒளி மாலிக், சதீஷ், சந்திரசேகர், மஜீத் , அய்யனார் ஐயப்பன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டு, மஞ்சள் பைகள் இனிப்பு வழங்கப்பட்டது. கல்லிடை ரயில் நிலையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் பெற ரயில்வேத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. முடிவில் அப்துல் சமது நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோட்டத்தில் கேந்தி பூக்களை டிராக்டர் ஏற்றி அழித்த விவசாயி : விலை வீழ்ச்சியால் விரக்தி
ஞாயிறு 4, ஜனவரி 2026 9:29:00 AM (IST)

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் : சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்
சனி 3, ஜனவரி 2026 4:19:36 PM (IST)

தாமிரபரணி ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு : கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
சனி 3, ஜனவரி 2026 12:38:11 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் புதிய வெள்ளித் தேர் வெள்ளோட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்!
சனி 3, ஜனவரி 2026 12:25:43 PM (IST)

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சனி 3, ஜனவரி 2026 10:42:24 AM (IST)

அந்தியோதயா ரயில் மீது மர்மநபர்கள் கல்வீச்சு : பெண் பயணி காயம்!
சனி 3, ஜனவரி 2026 8:22:47 AM (IST)


