» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காதல் திருமணம் செய்த வங்கி பெண் ஊழியர் தற்கொலை: கணவரும் தற்கொலை முயற்சி!

திங்கள் 8, ஜூலை 2024 8:18:07 AM (IST)

திருவேங்கடத்தில் காதல் திருமணம் செய்த வங்கி பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். டாக்டர் கணவரும் தற்கொலைக்கு முயன்றார்.

சேலம் மாவட்டம் ஸ்ரீவாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் இனியவன் (33). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். சேலம் அம்மாபேட்டை கடலூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டுவேல் மகள் சவுமியா (31). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இனியவன் வீட்டுக்கடன் வாங்குவதற்காக, சவுமியா வேலை செய்த வங்கிக்கு சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு இருவரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது. பின்னர் இனியவன்-சவுமியா தம்பதியர், திருவேங்கடம் அக்ரஹாரம் தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடிபெயர்ந்தனர்.

இந்த நிலையில் இனியவன் மருத்துவ பயிற்சிக்காக 6 மாதங்களுக்கு வெளியூருக்கு செல்ல வேண்டியிருப்பதால், மனைவி சவுமியாவை சேலத்தில் உள்ள தனது தாயாரின் வீட்டில் சென்று இருக்குமாறு கூறினாா். இதற்கு சவுமியா மறுப்பு தெரிவித்து தனது தாயாரின் வீட்டுக்கு சென்று விடுவேன் என்று கூறினாா். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் சவுமியா வீட்டில் தனி அறையில் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு தூங்கினார். 

நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. சவுமியா தூங்குவதாக கருதிய இனியவன் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்த இனியவன் நீண்ட நேரமாகியும் சவுமியா அறையில் இருந்து வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அங்கு சவுமியா மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திருவேங்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த சவுமியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மனைவி இறந்த துக்கத்தில் இருந்த இனியவன் திடீரென்று தற்கொலைக்கு முயன்றார். அவர், மருந்து இல்லாத வெற்று ஊசியை தனது உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவருக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த 7 மாதங்களில் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால் சங்கரன்கோவில் உதவி கலெக்டர் கவிதா மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory