» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 8, ஜூலை 2024 5:13:07 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (08.07.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களை பதிவு செய்வதற்கு கோரிக்கையின் தன்மைக்கேற்ப 8 தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டு மனுக்கள் பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டிருந்தது.
முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. மேலும் வாழ்வாதாரம் தொடர்பான கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கிற்கு அருகில் அமைந்துள்ள வாழ்வாதார வழிகாட்டி மையத்திற்கு அனுப்பி தீர்வு காணப்பட்டது.
மேலும், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் துறை ரீதியாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில், தமிழ்நாடு நீர்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டம் பகுதி III கீழ், களந்தை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு ரூ.12 இலட்சம் மதிப்பிலான டிராக்டரினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா , சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஜெயா , வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கிருஷ்ணகுமார் , வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண்மை வணிகம்) பூவண்ணன் , வேளாண்மை அலுவலர்கள் ஆனந்த்குமார், முத்துகுமார் உதவி வேளாண்மை அலுவலர் முத்துபிரபு, களத்தை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் தமிழ்செல்வன் மற்றும் அனைத்துதுறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஆய்வு
புதன் 1, ஏப்ரல் 2026 4:43:34 PM (IST)
_1775022580.jpg)
நெல்லையில் ஏப்.3-ல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: இரண்டாம் கட்ட பயண விவரம் வெளியீடு!
புதன் 1, ஏப்ரல் 2026 11:19:44 AM (IST)

நெல்லை தம்பதியிடம் 15 பவுன் நகை பறிப்பு: தானே ரயில் நிலையத்தில் துணிகரம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:35:50 AM (IST)

நெல்லையில் 2½ வயது பெண் குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ விசாரணை!
புதன் 1, ஏப்ரல் 2026 8:13:11 AM (IST)

எந்தத் தொகுதியில் நின்றாலும் நெல்லைக்கு செல்லப்பிள்ளை நான்: நயினார் நாகேந்திரன்
செவ்வாய் 31, மார்ச் 2026 3:48:10 PM (IST)

தென்காசி அருகே கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் சாம்பல்- வனவிலங்குகள் பாதிப்பு?
திங்கள் 30, மார்ச் 2026 9:41:38 AM (IST)

