» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் திருடிய நோயாளி கைது

திங்கள் 8, ஜூலை 2024 5:32:32 PM (IST)

வள்ளியூர் அருகே தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் திருடிய நோயாளியை போலீசார் கைது செய்தனர். 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சவுந்திர பாண்டிய புரத்தை சேர்ந்தவர் டாக்டர் ஆன்ட்ரோ ரோமியன்தாஸ் (41). இவர் தெற்குகள்ளிகுளம் பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மருந்துகள் வாங்கிய வகையில் சில மருந்து நிறுவனங்களுக்கு கொடுப்பதற்காக டாக்டர் ஆன்ட்ரோ தனது அறையில் உள்ள பையில் ரூ.5 லட்சம் வைத்திருந்தார்.

அப்போது நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து விட்டு டாக்டர் கைகளை சுத்தம் செய்ய சென்றுள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் டாக்டரின் அறையில் இருந்த ரூ.5 லட்சத்தை லாவகமாக திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதற்கிடையே மாலையில் டாக்டர் தனது பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த பணம் திருட்டு போனதால் அதிர்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அடிப்படையில் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு பணம் திருடிய நபர் தேடி வந்தனர். இதில் அவர் கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த ஜீவன்லால் (60) என்பதும், இப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை வள்ளியூர் போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory