» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி பங்கேற்பு!
புதன் 10, ஜூலை 2024 4:46:16 PM (IST)

தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி புதன்கிழமையான இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மனு கொடுக்க வந்த 50 மனுதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். மனு கொடுக்க வந்த வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரை தளத்திற்கு சென்று புகார் மனுவை பெற்றுக் கொண்டார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மருத்துவ மாணவி மர்ம மரணம்: போலீசார் விசாரணை
வியாழன் 8, ஜனவரி 2026 8:13:47 AM (IST)

தூத்துக்குடியில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: இருவர் கைது
வியாழன் 8, ஜனவரி 2026 7:59:54 AM (IST)

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
புதன் 7, ஜனவரி 2026 4:23:14 PM (IST)

ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
புதன் 7, ஜனவரி 2026 11:08:37 AM (IST)

மாணவி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு: அரசு கல்லூரி பெண் முதல்வர்,கணவருடன் கைது
புதன் 7, ஜனவரி 2026 8:09:34 AM (IST)

சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் கண்காட்சி அரங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:53:57 PM (IST)


jaamaniyanJul 10, 2024 - 05:51:48 PM | Posted IP 172.7*****