» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை தென்காசி மாவட்டங்களில் கறிக்கோழி-முட்டை விலை குறைந்தது
செவ்வாய் 30, ஜூலை 2024 11:17:52 AM (IST)
ஆடி மாதத்தையொட்டி நெல்லை தென்காசி மாவட்டங்களில் கறிக்கோழி, முட்டை விலைகள் குறைந்தன.
மக்கள் பொதுவாக அசைவ உணவில் ஆடு, கோழி, மீன், முட்டை உள்ளிட்டவர்களை சாப்பிட்டு வருவார்கள். இதில் குறிப்பாக கறிக்கோழி என்கின்ற பிராய்லர் கோழி, முட்டையை பெரும்பாலானவர்கள் அன்றாட உணவில் பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் நாமக்கல் மண்டலத்தில் உற்பத்திக்கு ஏற்ப முட்டையின் விலையும், பல்லடம் மண்டலத்தில் உற்பத்திக்கு ஏற்ப கறிக்கோழியான பிராய்லரின் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
தட்ப வெப்ப சூழல் மற்றும் பண்டிகை காலம் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப, பிராய்லர் கோழி, முட்டை விலையில் ஏற்றம், இறக்கம் காணப்படுவது வழக்கம். மேலும் பறவை காய்ச்சல் போன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்படும்போது பிராய்லர் கோழி, முட்டை விலை கடுமையாக சரிவை சந்திக்கிறது. குளிர்காலங்களில் இந்தியாவில் வட மாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகமாக இருக்கும் என்பதால் அந்த சீசனில் தமிழகத்தில் முட்டை விலை உயர்ந்து காணப்படும்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக முட்டை மொத்த விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.6-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கடந்த 3 தினங்களாக இதன் விலை படிப்படியாக சரிந்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள முட்டை மொத்த விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.5.30 காசு என சரிந்தது. ஒரு முட்டை விலையில் 70 காசு வரை குறைந்துள்ளது.
இதைப்போல் பிராய்லர் கோழி விலையும் ஆடி மாதம் பிறந்ததையொட்டி விலை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ பிராய்லர் கோழி ரூ.280-க்கு விற்பனையானது. அது தற்போது 100 ரூபாய் குறைந்து ரூ.180-க்கு விற்பனை ஆகிறது. இன்னும் சில கடைகளில் ரூ.160-க்கு விற்பனையாகிறது. அப்படி இருந்தும் கோழி விற்பனை மந்தமாகவே உள்ளது.
இதுகுறித்து பிராய்லர் கோழி வியாபாரி ஒருவர் கூறுகையில், "தற்போது பிராய்லர் கோழி உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் கோழி விலை குறைந்து வருகிறது. ஒரு கிலோ பிராய்லர் கோழி ரூ.280 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது ரூ.100 ரூபாய் குறைந்து ரூ.180-க்கு விற்பனை ஆகிறது. சில இடங்களில் மொத்தமாக விற்பனை செய்கிறவர்கள் ரூ.160-க்கு விற்பனை செய்கிறார்கள். மேலும் இந்த மாதத்தில் கோழி விற்பனையும் குறைந்துள்ளது. இதேபோல் முட்டை விலையும் குறைந்துள்ளது” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)
