» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

புதன் 31, ஜூலை 2024 3:08:20 PM (IST)

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜபுஷ்பம் (26) என்பவரை கடந்த 19.06.2016 அன்று குடும்ப பிரச்சனை காரணமாக கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் ராஜபுஷ்பத்தின் கணவரான மணிநகர் பள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த காசிலிங்கம் மகன் நவீன்குமார் (32) என்பவரை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 

இவ்வழக்கை அப்போதைய குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர்  மீனாட்சிநாதன் புலன் விசாரணை செய்து கடந்த 26.07.2016 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் இன்று குற்றவாளியான நவீன்குமாருக்கு இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்படி ஆயுள் தண்டனை ரூ.2,000 அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் 316 பிரிவின்படி 7 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை ரூ.1000 அபராதமும் விதித்து மேற்படி சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய குலசேகரன் பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சிநாதன் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் முருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.


மக்கள் கருத்து

rajtutJul 31, 2024 - 04:29:13 PM | Posted IP 162.1*****

இருந்தாலும் ஆயுள் தண்டனை செத்தாலும் ஆயுள் தண்டனை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory